உயிர்மை - January
 
யுத்தத்தை விரும்புகிறவர்கள் யார்?
- மனுஷ்ய புத்திரன்
மிருகம் - மனிதன் - எந்திரன் மேலும் சிக்கலாகும் அறம்
- ஆர்.அபிலாஷ்
'பூ' திரையில் ஒரு கரிசல் காட்டுக் கவிதை
- லக்ஷ்மி சரவணக்குமார்
மும்பைத் தாக்குதல்களும் ஊடகக் கதறல்களும்
- அ.முத்துக்கிருஷ்ணன்
போரும் வாழ்வும் : மும்பைத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா
- மாயா
குழந்தைப் போராளிகள் : பேரவலத்தின் ரத்த சாட்சியம்
- யமுனா ராஜேந்திரன்
பொது வாழ்வில் ஒரு நாளின் சில குறிப்புகள்
- அழகிய பெரியவன்
மறக்கப்பட்ட வலிகளின் வரலாறு
- ஹர்ஸ் மந்தர்
உங்கள் பெயர் என்ன?
- அ.முத்துலிங்கம்
போர் முனையிலிருந்து பின்வாங்குகிறதா இலங்கை ராணுவம்?
- இளைய அப்துல்லாஹ்
ஏ.கே.ராமானுஜன் : நாட்டார் கதைகளின் நாயகன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
இரண்டு பிரஞ்சுப் பெண்கள்
- பிரபஞ்சன்
ராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை
- ஷாஜி
ஊடலில்....
- றஞ்சனி
உலராத் துளிகள், மழை துவங்கிய அரட்டை
- ஆர். கார்த்திகா
இரவு
- யாழன் ஆதி
மழைப்பறவை பறந்த திசையில்
- த.செல்வசங்கரன்
ஒரு இடம் காலியாயிருக்கிறது
- ரவிஉதயன்
என் இருத்தலின் நஞ்சு
- கான் ஸ்யூ
பச்சை மரகதக் கல்கிளி
- சமயவேல்
கடிதங்கள்
- கடிதங்கள்
click here
யுத்தத்தை விரும்புகிறவர்கள் யார்?
மனுஷ்ய புத்திரன்

மும்பையில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தபட்டவிதத்தின் நேரடித்தன்மையும் நாடகப் பாங்கும் நிகழ்த்தபட்ட கால அளவும் இந்திய மக்களின் மனதில் ஒரு கொடுங்கனவாக மாறிவிட்டது. ஒரு குண்டுவெடிப்பில் கணத்தில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்படுவதைப் போன்றது அல்ல இது. அத்தகைய குண்டு வெடிப்புகள் பற்றிய பதிவுகள் பொதுமக்கள் நினைவில் ஒரு வாரத்திற்குமேல் தங்குவதுமில்லை. மும்பை தாக்குதல் மக்களுக்கு  நேரடியாகக் காட்டப்பட்டது. ஊடகங்களின் வழியே மக்கள் அதில் பார்வையாளர்களாக அல்ல பங்கேற்பாளராக மாறினார்கள். அது தங்கள்மீது, தேசத்தின்மீது தொடுக்கபட்ட யுத்தம் என்ற உணர்வு நாடு முழுக்கப் பரவியிருக்கிறது.

 ஆனால் இந்த யுத்தத்திற்கு யாருக்குப் பதிலடி கொடுப்பது? நிழல் எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள். பிடிபட்ட ஒரு பயங்கரவாதிக்கோ தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. நிழல் எதிரிகள் எங்கோ இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனமான யுத்தத்தை இந்த நாட்டின்மீது தொடுப்பவர்களின் முகங்கள் மங்கலாக  இருக்கின்றன. நாம் ஹோட்டல்களிலும் ரயில் நிலையங்களிலும் நாம் நமது குடிமக்களை சோதனை போட்டுக் கொண்டிருக்கும் வேலையில் அவர்கள் தங்களது மறைவிடங்களிலிருந்து யாரும் உத்தேசிகாத திசையில் தாக்குதலைத் திட்டமிடக் கூடும். இவ்வளவு பெரிய தேசத்தின் கதவுகளை மூடுவது எப்படி? நூறுகோடி மக்களை மெட்டல் டிடக்டர் முன் கொண்டுவருவது சாத்தியம்தானா? பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் மாற்றப்படுகிறார்கள். புதிய சட்டங்கள், புதிய புலனாய்வு அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. கொலைகாரர்கள் இந்த தேசத்தை பெரும் பைத்திய நிலைக்குள் தள்ளிவிட்டுவிட்டார்கள்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஒரு தளமாகப் பயன்படுகிறது என்பதற்கு ஏராளமான சாட்சியங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானின் அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகளுக்குள் ஆதிக்கம் செலுத்தும் அடிப்படைவாத சக்திகள் இந்தியாவில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்கிற ஆழமான சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்த அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக அங்கு வலுவான ஜனநாயக அமைப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் பாகிஸ்தான்மீதான யுத்தம்தான் இந்தியாவில் பயங்கரவாத பிரச்சினைக்கு ஒரு தீர்வா? சோனியா காந்திக்கோ சர்தாரிக்கோ இன்று ஒரு யுத்தம் தேவைப்படலாம். ஆனால் அவை பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் யுத்தமாக இருக்குமா அல்லது இரு தரப்பிலும் சில ஆயிரம் மக்களைக் கொன்று மேலும் அழிவுகளுக்கு வழிகோலும் யுத்தமாக இருக்குமா?

அமெரிக்காவின் இஸ்லாத்திற்கு எதிரான யுத்தத்தில் ஆப்கானிஸ்தான், இராக்கிற்குப் பிறகு இப்போது ஈரானும் பாகிஸ்தானும் அடுத்த இலக்காக இருக்கின்றன. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்ததுபோல பாகிஸ்தானை நேரடியாகத் தாக்குவது அமெரிக்காவிற்கு பல நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிக்கக் கூடியது. எனவே அது இந்தியாவை தனது முன்னணிப் படையாக யுத்த முனைக்குச் செலுத்த முற்படுகிறது. இந்தியாவிடம் அது திடீரெனக் காட்டும் கரிசன உணர்வு அதன் புதிய ராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியே. அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகெங்கும் புரிந்த குற்றங்கள்தான் இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்கி வளர்த்தது. இந்தியாவில் மூஸ்லீம்கள் மேல் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் பயங்கரவாதத்திற்கான ஆதரவு சக்திகளை விதைத்திருக்கும் சூழலில் அமெரிக்காவிற்கான புதிய ராணுவத் தளமாக இந்தியா பயன்படுவதற்கான எல்லாச் சூழலும் நிலவுகின்றன. இந்தியா அமெரிக்காவின் இந்த யுத்த தந்திரத்திற்கு பலியானால் அது இந்தியத் துணைக்கண்டத்தில் என்றென்றும் தீர்க்கமுடியாத அமைதியின்மையைக் கொண்டுவரும்.

உலகெங்கும் ரகசியப் பாதைகளின் வழியே பயணம் செய்துகொண்டிருக்கும் பயங்கரவாதிகளை இரண்டு நாட்டு ராணுவங்கள் மோதுவதால் ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது மக்களின் இதயங்களிலிருந்து தொடங்கவேண்டும் நிழல் எதிரிகளின் மீதான யுத்தத்தை தங்கள் சொந்தச் சகோதரர்களின்மீதானயுத்தமாக  மாற்றுவதால் நாம் மீளமுடியாத அபாயத்தில் சிக்கிக் கொள்வோம்.
இந்தப் படுகொலைகள், இந்த ஆறாத ரணங்களின் ஊடே இந்த தேசம் தனது மனவலிமையைப் பெருக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

click here

click here
click here