உயிர்மை.காம் உங்களை வரவேற்கிறது.
தமிழ் கூறும் நல்லுலகின் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். வணக்கங்கள்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல் ஏடாக திகழ்ந்து வரும் உயிர்மை இதழ் இப்போது இணையத்தின் வழியே உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களைத் தேடி வருகிறது.
இணையத் தமிழ் முக்கியமான எழுத்தாளர்களின் பங்கேற்பினாலும் முக்கியமான இதழ்களின் இணையய வடிவத்தினாலும் உற்சாகம் பெற்று வரும் சூழலில் உயிர்மையும் தனது ஆக்கபூர்வமான பங்களிப்புடன் தன்னை இணைத்துக் கொள்கிறது.
உயிர்மை.காம் நான்கு பிரதான பகுதிகளை கொண்டதாக அமையவிருக்கிறது.
உயிர்மை மாத இதழ்:
உயிர்மை மாத இதழில் வெளிவரும் ஆக்கங்களை இனி நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10 ஆந்தேதியன்று இணையத்தில் படிக்கலாம். தமிழின் முக்கியமான ஆளுமைகளும் இளம் படைப்பாளிகளும் தங்கள் தீவிரமான பங்களிப்பினை செலுத்தி வரும் உயிர்மை இதழ் தமிழில் இதுவரை எழுதப்படாத பல துறைகள் குறித்த ஆக்கங்களை தொடர்ந்து உங்களிடம் கொண்டு வரும்.
உயிர்மை பதிப்பகம்:
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களை உலகின் எந்த மூலையில் உள்ளவர்களும் இனி நேரடியாக உயிர்மை.காம் மூலம் வாங்கலாம். அதற்கான பக்கங்களில் வாங்கும் முறைகள் கொடுக்கபட்டுள்ளன. இந்தியா முழுக்க புத்தகங்களை அனுப்பும் அஞ்சல் செலவை உயிர்மை ஏற்றுக் கொள்ளும். பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் குறைந்த செலவில் நூல்களை வாங்கும் பொருட்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறிக்கபட்டுள்ளன.
உயிரோசை:
உயிர்மை.காம் உயிரோசை என்ற வாரந்திர இதழ் ஒன்றிணையும் இணையத்தில் கொண்டுவர முனைந்துள்ளது. கலை இலக்கியம், சமூகம் அர்சியல் சர்ந்த உடனடிப் பதிவுகளுடன் இந்த இணையப் பகுதி உயிர்மை.காமின் ஒரு பகுதியாக வெளிவர இருக்கிறது.
மனுஷ்ய புத்திரன் பக்கங்கள்:
உயிர்மை இதழில் ஆசிரியர், கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது எண்ணங்கள தொடர்ந்து எழுதும் பகுதி இது. மேலும் உயிர்மை.காமின் ஒரு பகுதியாக இது அமையும்.
உயிர்மையின் இந்த இணையதளம் வெற்றி பெற உங்கள் பங்களிப்பினையும் விமர்சனங்களையும் வேண்டி நிற்கிறது.
அன்புடன்
மனுஷ்யபுத்திரன்
ஆசிரியர்
உயிர்மை.காம்
uyirmmai@gmail.com